search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி"

    • மேற்படி இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்த கால அட்டவணையும் மாற்றப்பட்டு உள்ளது.
    • காலை, மாலை வந்து செல்வதற்கு ஏற்ற நேரத்தில் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில்களை அதே கால அட்டவணைப்படி மீண்டும் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து சேலத்தில் ெரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசனிடம், மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா்.நடராஜன் (கோவை ), கே.சுப்பராயன் (திருப்பூா்) ஆகியோா் முன்னிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டக் குழு சாா்பில் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாலக்காடு - திருச்சி, திருச்சி - பாலக்காடு, கோவை - நாகா்கோவில், நாகா்கோவில் - கோவை, கோவை - சேலம், சேலம் - கோவை ஆகிய 3 பயணிகள் ெரயில்கள் கொரோனா பொது முடக்கக் காலத்தில் நிறுத்தப்பட்டன.பொது முடக்கம் நீக்கப்பட்டு நீண்ட கால தாமதத்துக்கு பிறகு சேலம் - கோவை, கோவை - சேலம் பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் கடந்த 5 மாதங்களாக இந்த ெரயில் முழுமையாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ெரயிலை மீண்டும் முழுமையாக இயக்க வேண்டும்.

    மேலும் பாலக்காடு - ஈரோடு, கோவை - நாகா்கோவில் ஆகிய பயணிகள் ெரயிலும், விரைவு ெரயிலாக பெயா் மாற்றப்பட்டு, ஏற்கெனவே அந்த ெரயில்கள் நிறுத்தப்பட்டு வந்த பல புறநகர் ெரயில் நிலையங்களில் தற்போது நிறுத்தப்படாமல் இயக்கப்படுகின்றன. அத்துடன் மேற்படி இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்த கால அட்டவணையும் மாற்றப்பட்டு உள்ளது.

    கல்லூரி, அலுவலகம், தொழில் சாா்ந்த பணிகளுக்கு செல்லக்கூடியவா்கள் ஆயிரக்கணக்கானோா் காலை, மாலை வந்து செல்வதற்கு ஏற்ற நேரத்தில் இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    ஆனால் தற்போது விரைவு ெரயில்களாக நேரம் மாற்றப்பட்டு நிறுத்தங்கள் குறைக்கப்பட்டதால், ஏற்கெனவே பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே அந்த ெரயில்களை மீண்டும் கொரோனாவுக்கு முன் இயக்கப்பட்ட அதே நேரத்தில் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    கோவை முதல் மதுரை வரை திருப்பூா், ஈரோடு வழியாக புதிய இண்டா் சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்க வேண்டும். கோவை - நாகா்கோவில் இரவு நேர விரைவு ெரயிலில், தூத்துக்குடி இணைப்பு ெரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த சேவை நிறத்தப்பட்டு விட்டது. ஆகவே மீண்டும் இந்த இணைப்பு ெரயிலை இயக்க வேண்டும். திருப்பூா் ெரயில் நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும்.கோவை - ராமேசுவரத்திற்கு தற்போது திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் வாராந்திர ெரயிலாக இயக்கப்படுவதை தினசரி ெரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் தேவைக்கு ஏற்ப இங்குள்ள ெரயில் நிலையத்தில் உரிய வசதிகளை பயணிகளுக்கு முழுமையாகச் செய்து தர வேண்டும் என கூறியிருந்தனர். 

    ×